Saturday, September 26, 2015


சர்வதேச அமைதி நாள் (International Day of Peace) 


ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் பிரகடனத்தின் மூலம் ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் 21ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் ஏற்பாட்டில் உலகமெங்கும் சிறப்பு மாநாடுகள், சொற்பொழிவுகள், தீர்மானங்கள் என்று பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. நாடுகளின் தலைவர்களின் சமாதானம் பற்றிய செய்திகள் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், வானொலிகள் என சகல ஊடகங்களினதும் முதன்மைச் செய்திகளாக வெளிவரப்போகின்றன. ஆண்டில் ஒரு நாளாவது சமாதானம் என்றால் என்ன? அதன் தேவை எதற்கு என்பதை உலகம் சிந்திக்க இந்நாள் வழி வகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. கொலை வெறிக்கும், கொடும் பகைக்கும் உரமூட்டி, மக்களை பிளவு படுத்தும் ஈனச் செயல்களிலிருந்து உலகம் விடுபடும் நாளே உலக சமாதான தினமாக, நிம்மதி நிலவும் அமைதித் தினமாக விளங்கும்.


No comments:

Post a Comment