கருவறையில் இருந்து வெளிவரும் ஒரு குழந்தைக்கு அந்த தாய் உலகை அடையாளம் காட்டுகிறாள். அந்த உலகை புரிந்து பண்பட்டவனாய் வாழும் கலையை ஆசிரியர் தான் அந்த குழந்தைக்கு செவ்வனே கற்று கொடுத்து மனிதனை மனிதனாக மாற்றும் வேலையை செய்கின்றனர். அந்த உண்ணதமான பணியை செய்யும் ஆசிரியர்களை நினைவுகூறும் விதமாகவும், நன்றி தெரிவிக்கும் விதமாகவும் இந்தியாவின் இரண்டாவது ஜனாதிபதி சர்வபள்ளி திரு.ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் 5-ம் தேதியை ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறோம். அவர் ஒரு சிறந்த ஆசிரியராக மட்டும் இல்லாமல் சிறந்த தத்துவமேதையாகவும், சிறந்த கல்வியாளராகவும் விளங்கினார். இந்தியாவில் 1962 முதல் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 5ஆம் தேதியை ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.
No comments:
Post a Comment