Saturday, September 26, 2015


இன்று செப்டம்பர் 20 அன்னி பெசண்ட் அம்மையார் நினைவு தினம் 


         லண்டனில் ஒரு ஐரிஷ் குடும்பத்தில் பிறந்த இவர் “லிங்க்” என்ற பெயரில் பத்திரிகையைத் தொடங்கி, இந்தியாவிலும் அயர்லாந்திலும் விடுதலைப் போராட்டங்களுக்கு ஆதரவாக எழுதியதன் மூலம் உலக அளவில் அனைவராலும் அறியப்பட்டார். பெண்கள் விடுதலை, தொழிலாளர் உரிமைகள், குடும்பக் கட்டுப்பாடு போன்ற பலவற்றிலும் தனது மாறுபட்ட கருத்துகளை வெளிப்படையாகத் தெரிவித்தார் அன்னி பெசண்ட். விடுதலைக்கு பாடுபடும் இந்தியாவினை நேரில் வந்து கண்ட அன்னி பெசண்ட், சென்னையில் அடையாறில் பிரும்மஞான சங்கத்தின் தலைமை நிலையத்தை நிறுவினார். எப்போதும் இந்திய உடை தரித்து இந்தியராகவே வாழலானார். அன்னி பெசண்ட் இயற்கையிலேயே முற்போக்கு கருத்துக்களும் புரட்சி மனப்பான்மையும் கொண்டவர். ஆங்கில அரசின் அடக்குமுறைகள் அவரை வெகுவாகப் பாதித்தன. இந்திய விடுதலைக்கு ஆதரவாக ஹோம் ரூல் (சுயாட்சி) இயக்கத்தை தொடங்கினார். நாடு முழூவதிலும் அதன் கிளைகள் உருவாயின.அன்னி பெசண்ட் நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, விடுதலை இயக்கத்தை வலுப்பெறச் செய்தார். எண்பத்தேழாம் வயதில் 1937 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 இல் சென்னையில் உள்ள அடையாறில் அன்னி பெசண்ட் காலமானார். சென்னை அடையாறில் உள்ள அன்னி பெசண்ட் அமைத்த பிரும்மஞான சபை இன்றும் அவர் புகழ் பரப்பிக் கொண்டிருக்கிறது.


No comments:

Post a Comment