Friday, October 30, 2015

இன்று அக்.,16ம் தேதி உலக உணவு தினம் உலகில் அனைவருக்கும் போதுமான உணவு கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று உலக உணவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டியது மனித உரிமையாக கருதப்படுகிறது. வசதி வாய்ப்பற்றவர்கள், உடல் ஊனமுற்றவர்கள், இயற்கை சீரழிவுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்க வேண்டியது அரசின் கடமை என்கிறது ஐ.நா., சபை. இதை இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன. வளரும் நாடுகளில் நிலவும் விலைவாசி உயர்வால் உணவு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ஏழைகளுக்கு மூன்று வேளை உணவு என்பது கடினமான விஷயமாகிறது. பட்டினி மரணங்கள் அதிகரித்து வருகின்றன. உணவுப்பொருள் உற்பத்தியின் அளவு குறைகிறது. மக்களுக்கு விவசாயம் மீது ஆர்வம் குறைகிறது. முன்பெல்லாம் உலகுக்கே உணவளிக்கும் விவசாயிகளின் மீது மரியாதை இருந்தது. தற்போதைய கால மாற்றத்தில் விவசாயிகளின் நிலை பரிதாபத்துக்கு உரியதாக உள்ளது. வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. இன்றைய தலைமுறையினருக்கு விவசாயம் மீது ஆர்வமே இல்லை. மக்களின் கையில் பணம் இருந்தாலும் உணவு உற்பத்தி அதிகரித்தால் தான் எதிர்காலத்தில் அனைவருக்கும் உணவு கிடைக்கும்.


No comments:

Post a Comment