Friday, October 30, 2015

• வரலாற்றில் இன்று - சர்வதேச நேரம் கணக்கிடும் இடமாக கிரீன்விச் தேர்வு செய்யப்பட்டது அக்டோபர் 13 (1884) பூமி உருண்டை என்று விஞ்ஞான பூர்வமாக முடிவான பின்பு, இந்த பூமிப்பந்தின் ஒரு பகுதியை தொடக்கமாகக் கொள்ள முடிவு செய்தனர். மேலும் பூமியிலுள்ள இடங்களை எளிதாகஅடையாளம் கண்டு கொள்ள கடக ரேகை, அட்ச ரேகை போன்ற கற்பனைக் கோடுகளை உருவாக்கினர். அவை இரண்டும் சந்திக்கும் மையப்புள்ளியை ‘0’ டிகிரி என நிர்ணயித்தனர். . இதுதான் உலக நாடுகளின் நேரத்துக்கு ஆதாரமானது. கடக ரேகை மற்றும் அட்ச ரேகை இரண்டுமே இங்கிலாந்து நாட்டில் உள்ள ‘கிரீன்விச்‘ என்ற நகரின் மீது செல்வதால் இந்த கோட்டிற்கு அதே பெயரை வைத்தார்கள். அங்குள்ள நேரத்திற்கு ‘கிரீன்விச் மெரிடியன் டைம்‘ என்று பெயர் வைக்கப்பட்டது. இதை சுருக்கமாக கிரீன்விச் நேரம் என்றனர். ஆங்கிலம் எப்படி உலகின் பொது மொழியாக உள்ளதோ அது போல கிரீன்விச் நேரம் உலகின் பொது நேரமாக இருக்கிறது.


No comments:

Post a Comment