Thursday, November 12, 2015

வரலாற்றில் இன்று - மருது சகோதரர்களும் அவர்களது குடும்பத்தாரும் ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்ட நாள். அக்டோபர் 24, 1801. மருது பாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் தமிழ்நாட்டில் ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்ட முன்னோடிகளுள் குறிப்பிடத்தக்கவர்கள். ஆங்கிலேயரைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்ட 1785 முதல் 1801 இறுதி வரை ஆயுதம் தாங்கிப் போராடினார்கள். பெரிய மருது, சின்ன மருது எனப்படும் இவர்கள் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிய அனைத்திந்திய குழுக்களையும் ஒன்றிணைத்துத் திரட்ட முயன்ற போதுதான் ஆங்கிலேயரின் கோபத்திற்கு ஆளானார்கள். இவர்களது களம் சிவகங்கைச் சீமையைச் சேர்ந்த காளையார்கோயில் ஆகும். ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியரால் 1801 அக்டோபர் 24 இல் திருப்புத்தூரில் இவ்விருவரும் தூக்கிலிடப்பட்டனர். இவர்களது நினைவாலயம் காளையார் கோவிலில் அமைந்துள்ளது மருது சகோதரர்களுடைய வீரமும், நாட்டை காலனியாக வைத்திருந்து ஆதிக்கம் செலுத்திய, வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு எதிரான அவர்களது போராட்டமும், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தமிழனுடைய பங்களிப்புகளாக, ஒட்டுமொத்த தமிழகமும் நினைவுபடுத்தி பார்க்க வேண்டிய வீர வரலாறு ஆகும் .


வரலாற்றில் இன்று - அக்டோபர் 23, 1917 - லெனின் அக்டோபர் புரட்சிக்கு அறைகூவல் விடுத்தார்

போல்ஷெவிக் புரட்சி {Bolshevik revolution) எனவும் அறியப்படும் அக்டோபர் புரட்சி (October revolution), 1917ஆம் ஆண்டில் ரஷ்யாவின் தலைநகர் பெட்றோகிராட்டில் (தற்போது லெனின்கிராட்) ஏற்பட்ட ரஷ்ய பொதுவுடைமைக் கொள்கைப் புரட்சியின் இரண்டாம் கட்டமாகும். இது கார்ல் மார்க்ஸின்கருத்துக்களின் அடிப்படையில், இருபதாம் நூற்றாண்டில் இடம்பெற்ற முதலாவது பொதுவுடைமைப்புரட்சியாகும்.1927 இல் நடைபெற்ற புரட்சியின் 10 ஆம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்களின் பின்னர், இப்புரட்சியின் அதிகார பூர்வமான பெயராக மாபெரும் அக்டோபர் பொதுவுடைமை புரட்சி என்னும் பெயரே வழங்கி வருகின்றது.
அனைவருக்கும் வேலை, அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் ஆரோக்கியம், பட்டினி என்ற கொடுமையை முற்றிலும் சோவியத் மண்ணிலிருந்து விரட்டியது உள்ளிட்ட பெரும் சாதனைகளை சோசலிச திட்டங்கள் சாதித்தன. சோவியத் ஒன்றியத்தின் இந்த சாதனைகள், மேலை நாடுகளிலும் பிரதிபலித்தது. அங்கு உழைப்பாளி மக்களுக்கு குறைந்த பட்ச உரிமைகளையும் சலுகைகளையும் கொடுத்தே ஆக வேண்டும் என்ற நெருக்கடியை ஆளும் வர்க்கங்களுக்கு சோவியத் சாதனைகள் ஏற்படுத்தின.



No comments:

Post a Comment