Monday, November 16, 2015
Thursday, November 12, 2015
வரலாற்றில் இன்று - நவம்பர் 7-1917, உலக வரலாற்றில் மிகவும் முக்கியத்துவமுடைய நாள். அன்று தான் ரஷ்யாவில் ஜாரின் கொடுங்கோல் ஆட்சி தூக்கி எறியப்பட்டு முதல் முறையாக லெனின் தலைமையில் உழைக்கும் மக்களின் அரசு ரஷ்யாவில் அமைக்கப்பட்டது. அடிமைகள் என்று கருதப்பட்ட உழைக்கும் மக்களும் ஆட்சி அமைக்க முடியும் என்று உலகுக்கு காட்டிய நாள். ஆளும் வர்க்கத்தால் சுரண்டப்பட்டு வந்த உழைக்கும் வர்க்கம் சொந்த நாட்டை ஆட்சி செய்வதை உலகுக்கு அறிவித்த நாள்.

இந்தியாவில் எஸ்ஐ ஆகும் முதல் திருநங்கை பிரித்திகா யாஷினி!
சென்னை: தமிழகத்தை சேர்ந்த திருநங்கை பிரித்திகா யாஷினி எஸ்.ஐ. பதவிக்கு முழு தகுதி உடையவராக இருப்பதாகவும், எனவே அவருக்கு அந்த பதவியை வழங்கலாம் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தை சேர்ந்த பிரித்திகா யாஷினி, சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்காக விண்ணப்பித்த முதல் திருநங்கை. ஆணாக பிறந்தாலும் பின்னர் உடலில் ஏற்பட்ட பெண்மை உணர்வு காரணமாக, அறுவை சிகிச்சை செய்து கொண்டு பெண்ணாக மாறியவர். பிரித்திகா யாஷினி என்று தன் பெயரையும் மாற்றிக்கொண்டார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழக காவல்துறையில் சப்–இன்ஸ்பெக்டர் பணிக்கு அறிவிப்பு வெளியானபோது அதற்கு விண்ணப்பித்தார் பிரித்திகா. திருநங்கை என்ற காரணத்துக்காக அவருடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில், ரிட் மனு தாக்கல் செய்தார் பிரித்திகா.
மனுவை விசாரித்த நீதிமன்றம், எழுத்துத்தேர்வில் பிரித்திகாவை அனுமதிக்க உத்தரவிட்டது. அந்த தேர்வில் பிரத்திகா யாசினி கலந்துகொண்டு தேர்ச்சி பெற்றார். அடுத்து நடந்த உடல் தகுதி தேர்வில் ஓட்டப்பந்தயத்தில் ஒரு நொடி காலதாமதமாக வந்ததாக கூறி, பிரித்திகாவை தகுதி நீக்கம் செய்தது சீருடை பணியாளர் தேர்வாணையம்.
இதை எதிர்த்து மீண்டும் நீதிமன்றத்திடம் மனு செய்தார் பிரித்திகா. வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரை நேர்காணலில் அனுமதிக்க வேண்டும் என கறார் காட்டியது நீதிமன்றம்.
இதன் பின்னர் அவர் அனுமதிக்கப்பட்டு, எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்றார். தொடர்ந்து, 400 மீ. நீளம் தாண்டுதல், எறி பந்து ஆகிய போட்டிகளில் தேர்ச்சி பெற்றார். இறுதியாக 100 மீ ஓட்டப்பந்தயத்தில் 17.5 நொடிகளில் கடக்க வேண்டிய தூரத்தை 18.5 நொடிகளில் கடந்து தோல்வியுற்றதாக அறிவிக்கப்பட்டார்.
இந்த தேர்வு முடிவின் வீடியோ ஆதாரங்களை வைத்து, மறுபரிசோதனை செய்யுமாறு நீதிமன்றத்தில் கோரிய மனுவின் காரணமாக, மனிதாபிமான அடிப்படையில் மீண்டும் நடத்தப்பட்ட 100 மீ ஓட்டத்தில் வெற்றி பெற்றார்.
இந்நிலையில், பிரித்திகா யாசினி குறித்த வழக்கு இன்று (5-ம் தேதி) விசாரணைக்கு வந்தது. '

இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன்கவுல் மற்றும் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, ''தமிழக காவல்துறையில் பணியாற்ற திருநங்கை பிரித்திகா யாசினி முழுதகுதி உடையவர். அவருக்கு எஸ்.ஐ. பணி வழங்க வேண்டும். அவர் அர்ப்பணிப்போடும், மற்ற திருநங்கைகளுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் இருப்பார்.
எதிர்காலத்தில் மூன்றாம் பாலினத்தவர் கலந்து கொள்ளும் வகையில் தேர்வு முறையை மேற்கொள்ள வேண்டும்'' என்றும் உத்தரவிட்டனர்.
எதிர்காலத்தில் மூன்றாம் பாலினத்தவர் கலந்து கொள்ளும் வகையில் தேர்வு முறையை மேற்கொள்ள வேண்டும்'' என்றும் உத்தரவிட்டனர்.
உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவின்படி, இந்தியாவில் எஸ்ஐ ஆகப்போகும் முதல் திருநங்கை பிரித்திகா யாஷினி ஆவார். இதற்கு முன் இந்திய அளவில் 2 திருநங்கைகள் கான்ஸ்டபிளாக பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வரலாற்றில் இன்று நவம்பர் 6, 1860 - ஆபிரகாம் லிங்கன் அமெரிக்காவின் 16வது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரே குடியரசுக் கட்சியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது அதிபராவார். செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகனாக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர்தான் ஆபிரகாம் லிங்கன். சிறு வயது முதலே பல தோல்விகளை சந்தித்தார் . தோல்வி என்பது அவரின் வாழ்கையின் ஒரு நிரந்தர நிகழ்வாக இருந்தது. இருப்பினும் தனது தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சியால் அவர் அமெரிக்காவின் ஜனாதிபதி ஆனார்.

இன்று உலகப் புகழ்பெற்ற நாடக ஆசிரியர் ஜார்ஜ் பெர்னாட்ஷா நினைவு நாள் 1950 ஆம் ஆண்டு நவம்பர் 2 கேலியும்,கிண்டலும், துள்ளலான நடையழகும் கொண்ட பெர்னார்ட்ஷாவின் நாடகங்கள் உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றவை. அவர் எழுத்துகள் மட்டுமல்ல, வாழ்ந்த வாழ்க்கையும் கூட வண்ணமயமானதுதான். உலக இலக்கியத்தின் உச்சம் என்றால், அது நோபல் பரிசுதான். பெர்னாட்ஷா ஆங்கில இலக்கியத்தின் மிகச் சிறந்த எழுத்தாளல்களில் ஒருவராக, ஷேக்ஸ்பியருக்கு இணையாகப் போற்றப்படுபவர். அவரது நாடகங்கள், ஆய்வுப்படைப்புகள், சிந்தனைகள் அனைத்தும், இன்றைய வாசகர்களாலும் விரும்பிப் படிக்கப்படுபவை. இத்தனைக்கும், பெர்னாட்ஷா எழுதிய விஷயங்கள் ஒவ்வொன்றும், நெருப்புப்போல, வரிக்கு வரி நகைச்சுவை பொங்கும் எழுத்து. ஆனால் சிரித்து முடித்த அடுத்த வினநாடி, அதன் பின்னணியில் இருக்கும் நிஜம் நெஞ்சைச் சுடும். சமூகத்துக்காக ஏதாவது உடனே செய்தாகவேண்டும் என்கிற வேகம் உண்டாகிவிடும். நோபல் பரிசு, ஆஸ்கர் பரிசு இரண்டையும் வென்ற எழுத்தாளர் பெர்னார்ட்ஷா தவிர உலகில் வேறு யாரும் இல்லை. உலகப் புகழ் பெற்ற உன்னதப்படைப்பாளியின் உத்வேகமூட்டும் வாழ்க்கை

இன்று பரிதிமாற் கலைஞர் (வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியார் ) நினைவு நாள் - நவம்பர் 2, 1903. இவர் ஒரு தமிழறிஞரும், நூலாசிரியரும், தனித்தமிழ் இயக்கத்தில் முதன்மையான பங்கு பங்கு வகித்தவரும் ஆவார். உயரிய செந்தமிழ் நடையில் பேசுவதிலும் எழுதுவதிலும் வல்லவர். நாடகப் புலமை சான்றவர். 'தமிழ் மொழி வரலாறு' போன்ற ஆய்வு நூல்களையும், கலாவதி, ரூபாவதி போன்ற நாடக நூல்களையும், நாடக இலக்கணமான நாடகவியலையும் இயற்றிவர். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் சூரியநாராயணன் என்பது. பின்னாளில் சூரியநாராயண சாஸ்திரியர் என்று அழைக்கப்பட்ட இவர், தமிழ் மேல் கொண்ட பற்றினால் தனது பெயரை வடமொழி கலக்காத தூய தமிழில் பரிதிமாற் கலைஞர் என்று மாற்றிக்கொண்டார். இதுபோல் வடமொழியற்ற நல்ல தமிழ்மொழி வேண்டும் என்பதில் எப்போதுமே பெரும் முனைப்பு காட்டினார். 33 ஆண்டுகளே வாழ்ந்து இவர் மறைந்தபோது இவரது பேராசிரியர் மில்லர் (ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவர்) பின்வருமாறு புலம்பி அழுதுள்ளது அவரது ஆளுமைக்குச் சான்றாகும்: "புருவங்கள் சுருக்கம் ஏறி, கண்களை மறைக்கும் முதுமையில் இன்னும்கூட நான். வாழ்ந்து கொண்டுதான் உள்ளேன். ஆனால் நடுவயது வருவதற்கு முன்னரே நற்றமிழ்ப்பரிதி அகன்றானே." தமிழைக் காத்த பெருந்தகையை அவரது நினைவு நாளில் போற்றுவோம்

இந்திரா காந்தி தனது இரண்டு பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட நாள் (அக்டோபர் 31, 1984). இந்திரா காந்தி இந்தியாவின் முதல் பெண் பிரதமரும் மூன்றாவது பிரதமருமாவார். அமிர்தசரஸ் பொற்கோயிலினுள் பதுங்கியிருந்த ஆயுதம் ஏந்திய காலிஸ்தான் தீவிரவாதிகளை இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை மூலம் சுட்டுக் கொன்ற காரணத்தால் சீக்கிய மக்கள் இந்திரா காந்தி மீது கோபம் கொண்டிருந்தனர். அதன் விளைவாகவே இந்திரா காந்தி தனது இரண்டு சீக்கிய பாதுகாவலர்களாலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். அதனைத் தொடர்ந்து புதுடில்லியில் இடம்பெற்ற கலவரத்தில் சுமார் 2000 சீக்கியர்கள் கொல்லப்பட்டார்கள்.

இந்தியாவின் ‘இரும்பு மனிதர்’ என்று போற்றப்படும் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாள் இன்று - அக்டோபர் 31, 1875 சுதந்திரப் போராட்டத்தின் சிப்பாய் என்று அழைக்கப்பட்டார். இந்திய விவசாயிகளின் ஆன்மாவாக கருதப்பட்டார். நவீன இந்தியாவை உருவாக்கியவர்களில் முக்கியமானவர். சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராகவும் துணைப் பிரதமராகவும் பணியாற்றினார். நாடு முழுவதும் ஆங்காங்கே துண்டு துண்டாக மன்னராட்சி நடந்துகொண்டிருந்த 565 ராஜ்ஜியங்களை ஒன்றிணைத்ததுதான் உள்துறை அமைச்சராக அவர் ஆற்றிய முதல் பணி. வி.பி.மேனனுடன் இணைந்து அகண்ட பாரதத்தை அமைத்தார். அகண்ட பாரதம் அவ்வளவு எளிதாக அமையவில்லை. அந்த இலக்குக்காக சகல வழிகளையும் பின்பற்றினார். சர்ச்சைகள், எதிர்ப்புகள் எழுந்தாலும் இரும்பு மனிதராக நின்று சமாளித்தார். பட்டேல் 75-ம் வயதில் இறந்தார். 1991-ல் படேலுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

வரலாற்றில் இன்று - ஐக்கிய நாடுகள், அல்லது ஐநா அல்லது . U N , என்பது, ஒரு பன்னாட்டு அமைப்பு. உலகின் அனைத்து நாடுகளும் இதில் உறுப்பினராக இருக்கின்றன. இது, வாஷிங்டனில் நடைபெற்ற டம்பார்ட்டன் ஓக்ஸ் மகாநாட்டைத் தொடர்ந்து அக்டோபர் 24, 1945ல், கலிபோர்னியாவிலுள்ள,சான் பிரான்சிஸ்கோவில் தொடங்கப்பட்டது. இச்சபையில் தற்போது வரை 193 உறுப்பு நாடுகள் உள்ளன. அது துவக்கப்பட்ட ஒரு சில நாட்கள் கழித்து - அக்டோபர் மாதம் 30ம் நாள், 1945 – இந்தியா ஐநாவில் இணைந்தது

இன்று இந்தியாவின் பத்தாவது குடியரசுத் தலைவர் கே. ஆர். நாராயணன் என்று அறியப்படும் கொச்செரில் ராமன் நாராயணன்பிறந்த நாள் - அக்டோபர் 27, 1920. குடியரசு தலைவர் பதவி வகித்த ஒரே தலித் சமூகத்தவர் கே.ஆர் நாராயணன்தான். குடியரசு தலைவர் தேர்தலில் அதிக வாக்குகள் அதாவது 9,56,290 வாக்குகளைப் பெற்று ராஷ்டிரபதி பவனுக்குச் சென்றவர். தன்னை எதிர்த்து போட்டியிட்ட டி. என். சேஷனை விட மிக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். 1998ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் வழக்கத்துக்கு மாறாக இவரும் வாக்களித்தார். இந்தியக் குடியரசின் பொன்விழாக் கொண்டாட்டத்தின் போது இவரே அவ்விழாக்களுக்கு தலைமை வகித்து சிறப்பித்தார்.

இரண்டு தலித் குழந்தைகள் எரித்துக் கொல்லப்பட்டதை மத்திய அமைச்சர் வி. கே. சிங் ஒரு தெரு நாய் மீது யாரோ கல்லெறிவதற்கு சமம் என்று கூறினார். எதிர்கட்சித்தலைவர்கள் இதனை வன்மையாகக் கண்டித்த பிறகும் அதனை அவர் தவறு எனக் கருதி தனது பேச்சை வாபஸ் வாங்கவில்லை. மாறாக 'ஒருவேளை' தனது பேச்சு யாருடைய மனதையாவது புண் படுத்தியிருந்தால் அவர்களிடம் மட்டுமே வருத்தம் தெரிவிப்பதாகக் கூறியுள்ளார். எனவே வி. கே. சிங்கின் பேச்சு யார் யார் மனதைப் புண்படுத்தியுள்ளது என்பதை தெரியப்படுத்துமாறு கோரப்படுகிறார்கள்

வரலாற்றில் இன்று - 1924 அக்டோபர் 25, – இந்தியாவில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிரிட்டிஷ் அரசினால் சிறைப்பிடிக்கப்பட்டார். தமது வாழ்நாளில் இருபது ஆண்டுக் காலத்தில் நேதாஜி 11 முறை கைது செய்யப்பட்டார். அதில் முதலாவது 1921ம் ஆண்டு அக்டோபர் மாதம் 25ம் நாள் அவரது ஆதரவாளர்களோடு கைது செய்யப்பட்டது. அப்போது நேதாஜி ஒரு காங்கிரஸ்காரர். பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் வேல்ஸ் இளவரசரின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து “கொல்கத்தா தொண்டர் படையின்” தலைவராக பொறுப்பேற்று, தன்னுடைய எதிர்ப்பை ஆக்ரோஷமாகவெளிப்படுத்திய நேதாஜி மற்றும் பல காங்கிரஸ் தொண்டர்களையும் ஆங்கில அரசு கைது செய்தது. கைது செய்யப்பட நேதாஜியும் அவரது ஆதரவாளர்களும் பர்மாவின் மண்டலாய் சிறைக்கு அனுப்பப்பட்டனர். இந்த மண்டலாய் சிறையானது அந்தமானில் உள்ள செல்லுலார் சிறையைப் போன்றது. வங்காளத்தைச் சேர்ந்த அரசியல் கைதிகளை அந்தமான் அல்லது மண்டலாய் சிறைகளுக்கு அனுப்புவது ஆங்கிலேய அரசின் வழக்கமாய் இருந்தது. மண்டலாய் சிறையில் தனது முதலாம் சிறைவாசத்தில் போஸ் கடுமையாக நோய் வாய்ப்பட்டார். அதன் காரணமாக மூன்று மாத காலத்தில் அவர் விடுதலை செய்யப்பட்டார். .

வரலாற்றில் இன்று - அக்டோபர் 23, 1917 - லெனின் அக்டோபர் புரட்சிக்கு அறைகூவல் விடுத்தார்
போல்ஷெவிக் புரட்சி {Bolshevik revolution) எனவும் அறியப்படும் அக்டோபர் புரட்சி (October revolution), 1917ஆம் ஆண்டில் ரஷ்யாவின் தலைநகர் பெட்றோகிராட்டில் (தற்போது லெனின்கிராட்) ஏற்பட்ட ரஷ்ய பொதுவுடைமைக் கொள்கைப் புரட்சியின் இரண்டாம் கட்டமாகும். இது கார்ல் மார்க்ஸின்கருத்துக்களின் அடிப்படையில், இருபதாம் நூற்றாண்டில் இடம்பெற்ற முதலாவது பொதுவுடைமைப்புரட்சியாகும். 1927 இல் நடைபெற்ற புரட்சியின் 10 ஆம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்களின் பின்னர், இப்புரட்சியின் அதிகார பூர்வமான பெயராக மாபெரும் அக்டோபர் பொதுவுடைமை புரட்சி என்னும் பெயரே வழங்கி வருகின்றது.
அனைவருக்கும் வேலை, அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் ஆரோக்கியம், பட்டினி என்ற கொடுமையை முற்றிலும் சோவியத் மண்ணிலிருந்து விரட்டியது உள்ளிட்ட பெரும் சாதனைகளை சோசலிச திட்டங்கள் சாதித்தன. சோவியத் ஒன்றியத்தின் இந்த சாதனைகள், மேலை நாடுகளிலும் பிரதிபலித்தது. அங்கு உழைப்பாளி மக்களுக்கு குறைந்த பட்ச உரிமைகளையும் சலுகைகளையும் கொடுத்தே ஆக வேண்டும் என்ற நெருக்கடியை ஆளும் வர்க்கங்களுக்கு சோவியத் சாதனைகள் ஏற்படுத்தின.

Subscribe to:
Comments (Atom)