தமிழ் நாடு
கலை இலக்கியப் பெருமன்றம்
தஞ்சை மாவட்டப் பேரவைக் கூட்டம்
06-08-2015
தமிழ் நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாவட்டப் பேரவை தஞ்சை AITUC அலுவலகத்தில் நடைபெற்றது. நமது மாவட்டச் செயலர் ஆ. குழந்தைவேலு அவர்கள் தலைமை வகித்தார்.
மாவட்டத் தலைவர் ச. புகழேந்தி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். மாவட்டச் செயலர் தோழர். ஆ.குழந்தைவேலு அவர்கள் பேரவை அறிக்கையை சமர்ப்பித்துப் பேசினார். CPI மாவட்டச் செயலர் தோழர் R. திருஞானம் அவர்களும், AITUC மாநிலத் தலைவர் தோழர் சந்திரகுமார் அவர்களும் வாழ்த்துரை வழங்கினர்.
பேரவையில் கீழ்க்கண்ட தோழர்கள் மாவட்டக் குழுவின் புதிய பொறுப்பாளர்களாக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தலைவர் : S. சிவசிதம்பரம், பட்டுக்கோட்டை.
துணைத் தலைவர்கள் : Dr. மு. செல்லப்பன்
புலவர் மூ. முத்துவேலு
நா. விச்சுவநாதன்
புலவர் மூ. முத்துவேலு
நா. விச்சுவநாதன்
செயலர் : A. குழந்தைவேலு, தஞ்சாவூர்.
துணைச் செயலாளர்கள் : முனைவர். பிரகதீசு
கவிஞர். வல்லம் தாஜுபால்
இரா. சுந்தரம்
கவிஞர். வல்லம் தாஜுபால்
இரா. சுந்தரம்
பொருளாளர் : ச. புகழேந்தி, திருவையாறு
இறுதியாக மாநிலப் பொதுச் செயலாளர் இரா. காமராசு அவர்கள் விளக்கவுரையாற்றினார். மன்னையில் நடைபெறவிருக்கும் மாநில மாநாடு பற்றியும், மன்றத்தின் எதிர்காலச் செயல்பாடுகள் குறித்தும், உறுப்பினர் செயல்பாடு, புதிய உறுப்பினர் சேர்க்கையில் நமது அணுகுமுறை ஆகியவை பற்றியும் விளக்கமாக பேசினார். இறுதியில் பட்டுக்கோட்டை கிளைச் செயலர் புலவர். மூ. முத்துவேலு அவர்கள் நன்றியுரை கூற பேரவை இனிதே முடிந்தது.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
1. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் 11 வது மாநில மாநாடு வரும் செப்டம்பர் 11,12,13 ஆகிய தேதிகளில் மன்னார்குடியில் நடைபெறுவதையொட்டி அம் மாநாடு சிறக்க அனைவரும் கலந்து கொள்வது.
2. தஞ்சையில் உள்ள தென்னகப் பண்பாட்டு மையத்தில் பழிவாங்கப்பட்ட பணியாளர் சங்கத் தலைவர் மற்றும் செயலருக்கு உடனடியாக பணி வழங்க வேண்டும். ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
3. பள்ளிகளில் தமிழ் மொழிப் பாடம் கட்டாய பாடமாக சட்டம் இயற்ற வேண்டும்.
4. திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்.
No comments:
Post a Comment