Monday, August 31, 2015

பெரம்பலூர் புத்தக விழாவில் தலைவர் பொன்னீலன் பேசுகிறார்.

Sunday, August 30, 2015





தமிழ்நாடு கலை இலக்கியப்பெருமன்றம் 

சிவகங்கை மாவட்ட மாநாடு 

29/08/2015 - சனிக்கிழமை - காலை 10 மணி 
கவியரசர் கண்ணதாசன் மணிமண்டபம் 
காரைக்குடி.

தலைமை: நாவலாசிரியர்.சந்திரகாந்தன்

வரவேற்புரை: தோழர்.வெ.மாரி - NFTE 

கவியரங்கம்  - கருத்தரங்கம் - கலையரங்கம்

வாழ்த்தரங்கம் - பாராட்டரங்கம் - பட்டிமன்றம் 

பங்கேற்பு : தோழர்கள் 

பொன்னீலன் 

பரிணாமன் 

இரா.காமராசு 

த.ச.நடராஜன்

குணசேகரன்-MLA 

முனைவர் பாண்டி

பழ.  இராமச்சந்திரன் 

முனைவர் மு.சு.கண்மணி

கம்பன் கழகம் பழனியப்பன் 

தமுஎச சங்கரசுப்பிரமணியன் 

முனைவர் பழனி இராகுலதாசன்

திருக்குறள் பேரவை ஜெயங்கொண்டான் 

மற்றும்  கலை இலக்கியச்சான்றோர்கள்....

தோழர்களே... வருக...

Wednesday, August 26, 2015



கலை இலக்கியப் பெருமன்றத்தின் பிதாமகன் 

தோழர். ஜீவா 

பிறந்த தினம்  -  ஆகஸ்ட் 21


பாரதிக்கு முகவரி தந்தான்..
பாட்டாளிக்கு பொதுவுடைமை  சொன்னான்...
எளிமைக்கு இலக்கணம் எழுதினான்...
நேர்மைக்குச்  சின்னமாய்  நின்றான்..
தமிழைத் தலை நிமிர வைத்தான்...
கலை இலக்கியத்தின்.. 
கலங்கரை விளக்கமாய் நின்றான்..

ஜீவனுள்ள தலைவன்...

தோழர்.ஜீவா... 

புகழ் பாடுவோம்...
=========================================================

இந்த தேசத்தின் சொத்து-ப. ஜீவானந்தம்

மகாத்மா காந்தியால் இந்த தேசத்தின் சொத்து’ என்று பாராட்டப்பட்டவரும் பொதுவுடமைக் கொள்கைக்காகப் பாடுபட்டவருமான ப. ஜீவானந்தம் பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 21).அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

நாகர்கோவிலை அடுத்த பூதப்பாண்டி என்ற ஊரில் பிறந்தார் (1907). அந்த கிராம தெய்வத்தின் பெயரான சொரிமுத்து என்ற பெயரை பெற்றோர் இட்டனர். இளம் வயதிலேயே எழுத்தாற்றல் மிக்கவராகத் திகழ்ந்தார். ஒன்பதாவது படிக்கும் சமயத்தில் இவர் எழுதிய முதல் கவிதையே காந்தியையும் கதரையும் பற்றியது.
பத்தாம் வகுப்பு படித்த சமயத்தில் சுகுணராஜன் அல்லது சுதந்திரவீரன்’ என்ற நாவலை எழுதினார். அடுத்துஞானபாஸ்கரன்’ என்ற நாடகத்தை அவரே எழுதித் தயாரித்துநடித்தார். காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்துக்கான அறைகூவலால் ஈர்க்கப்பட்டார்.
அந்நியத் துணிகள் பகிஷ்கார இயக்கத்தின்போது தேசபக்தர் திருகூடசுந்தரம் பிள்ளையின் பிரச்சார உரையை கேட்ட இவர்அன்றிலிருந்து கதராடை அணியத் தொடங்கினார். தீண்டாமை ஒழிப்பில் தீவிரமாக ஈடுபட்டார். மகனின் போக்கு தந்தைக்குப் பிடிக்கவில்லை. இருவருக்குமிடையே வாக்குவாதம் எழுந்தது. தன் கொள்கைக்காக வீட்டைத் துறந்தார் இந்த இளைஞர்.
அப்போது 17 வயதுதான். 1932-ல் ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்துகொண்டு சிறை சென்றார். சிறையில் இவரது சிந்தனைப்போக்கு மாறியது. கம்யூனிசக் கோட்பாடுகளால் ஈர்க்கப்பட்டார். அந்தசமயத்தில் பகத்சிங் தூக்கிலிடப்பட்டதை சகித்துக்கொள்ள முடியவில்லை. சீறி எழுந்தார்.
அனல் கக்கும் இவரது பேச்சு இளைஞர்களை எழுச்சியடைய வைத்தன. சிறையிலிருந்தபோது பகத்சிங் தன் தந்தைக்கு எழுதிய நான் ஏன் நாத்திகனானேன்?’ என்ற நூலைத் தமிழில் மொழிபெயர்த்தார். அதற்காக இவரைக் கைது செய்து கைகால்களில் சங்கிலியிட்டு வீதி வீதியாக இழுத்துச் சென்று திருச்சி சிறையில் அடைத்தனர் போலீஸார்.
இவரது 40 ஆண்டுகால பொதுவாழ்வில் ஏறக்குறைய 10 ஆண்டு கள் சிறையில் கழிந்தது. நாடு விடுதலை அடையும் வரை பல்வேறு சூழல்களில் நடைபெற்ற தொழிலாளர் போராட்டங்களுக்காக இவர் எழுதிய பாடல்களும் ஊர் ஊராகச் சென்று இவர் ஆற்றிய உரைகளும் தொழிலாளர்களை எழுச்சிபெறச் செய்தன.
மார்க்சிய கருத்துகளை தமிழில் கூற பல புதிய பதங்களை உருவாக்கினார். 1940களின் இறுதியிலும் 50களிலும் ஜீவா எழுதிய சோஷலிச சரித்திரம்’ மற்றும் சோஷலிச தத்துவம்ஆகிய நூல்களைத் தொடர்ந்து ஏராளமான சோவியத் நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டன.
 ‘சமதர்மம்’, ‘அறிவு’, ‘ஜனசக்தி’ உள்ளிட்ட இதழ்களின் ஆசிரியர் பொறுப்பையும் ஏற்றிருந்தார். சென்னை வண்ணாரப்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, 1952 முதல்1957 வரை சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டார். 1959-ல் தாமரை’ என்ற இலக்கிய இதழைத் தொடங்கினார்.
1961-ல் கலை இலக்கியப் பெருமன்றம்’ என்ற அமைப்பை உருவாக்கினார். இயக்கம்,போராட்டம்சிறை என்று பொதுவாழ்க்கையில் தீவிரமாக ஈடுபட்டு வந்தாலும் இலக்கியத் திறனையும் தக்கவைத்துக் கொண்டவர். புதுமைப் பெண்’, ‘இலக்கியச் சுவை’, ‘மதமும் மனித வாழ்வும்’, ‘சங்க இலக்கியத்தில் சமுதாயக்காட்சிகள்’ உள்ளிட்ட பல நூல்களையும் எழுதியுள்ளார்.
தமிழக அரசு இவரது நினைவைப் போற்றும் வகையில் நாகர் கோவிலில் பொதுடைமை வீரர் ப. ஜீவானந்தம் மணிமண்டபம் அமைத்துள்ளது. புதுச்சேரியில் அரசுப் பள்ளிக்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. தன்னலம் கருதாமல் இளைய தலை முறையினருக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்த      ப. ஜீவானந்தம், 1963-ம் ஆண்டு தமது 55-ம் வயதில் மறைந்தார்.
நன்றி - தி இந்து தமிழ் 


தி.மு.க.வில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார் 
எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் 

         எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் தி.மு.க. தலைவர் கருணாநிதியை இன்று நேரில் சந்தித்து அக்கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார். 'உயிர்மை' இலக்கிய இதழின் ஆசிரியரான மனுஷ்யபுத்திரன் தொலைக்காட்சி விவாதங்களிலும் பத்திரிகைகளிலும் தி.மு.க.வுக்கு ஆதரவாக கருத்துகளை முன்வைத்து வந்தார். இவரது சகோதரி கவிஞர் சல்மா, ஏற்கெனவே தி.மு.க.வில் இருப்பவர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் தி.மு.க.வின் முப்பெரும் விழா விருதுகளில் கலைஞர் விருதுக்கு மனுஷ்யபுத்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று தாம் தி.மு.க.வில் அதிகாரப்பூர்வமாக இணைந்திருப்பதாக ஃபேஸ்புக் பக்கத்தில் மனுஷ்யபுத்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரது பதிவு: இன்று காலை கலைஞர் அவர்களை கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து கலைஞர் விருதிற்கு தேர்வு செய்தமைக்கு நன்றி தெரிவித்தேன். மேலும் தி.மு.க பொருளாளர் ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் அதிகாரப் பூர்வமாக இணையும் படிவத்தில் கையெழுத்திட்டேன். பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி உடனிருந்தார். திராவிட இயக்க இலட்சியங்களையும் சமூக நீதிக் கோட்பாடுகளையும் முன்னெடுக்கும் எனது பயணத்தில் இந்த நாளை எனது வாழ்வில் முக்கியமானதாகக் கருதுகிறேன். இவ்வாறு மனுஷ்யபுத்திரன் ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளார்.

பயனுள்ள தகவல்கள்
        நமது உடல், ஒவ்வொரு உடல் பாகத்திற்கென தனித்தனியே கடிகாரத்தின் அலாரத்தை முன்பதிவு செய்து கொண்டு சுழன்று கொண்டிருக்கிறது.

��ஒவ்வொரு உறுப்புக்கும் அதன் பணியை செய்து முடிக்க இரண்டு மணி நேரம் ஒதுக்கியுள்ளது. இரண்டு மணி நேரம் முடிந்ததும் மீண்டும் அலாரத்தை அடுத்த உறுப்புக்கு மாற்றி விடுகிறது.

��விடியற்காலை 3.00 மணிமுதல் 5.00 மணிவரை நுரையீரலின் நேரம். இந்த நேரத்தில் சுவாசப் பயிற்சி செய்து காற்றின் மூலம் வரும் பிராண சக்தியை உடலுக்குள் அதிகமாகச் சேகரித்தால் ஆயுள் நீடிக்கும்.
தியானம் செய்யவும் ஏற்ற நேரம் இது. ஆஸ்துமா நோயாளிகள் இந்த நேரத்தில் மிகவும் சிரமப்படுவார்கள்.

��விடியற்காலை 5.00 மணிமுதல் 7.00 மணிவரை பெருங்குடலின் நேரம். காலைக்கடன்களை இந்த நேரத்துக்குள் முடித்தே தீர வேண்டும் மலச்சிக்கல் உள்ளவர்கள் இந்த நேரத்தில் எழுந்து கழிவறைக்குச் செல்லும்
பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் நாளடைவில் மலச்சிக்கல் தீரும்.உயிரணுக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ள நேரமும் கூட இதுவே.

��காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை வயிற்றின் நேரம்.
இந்த நேரத்தில் கல்லைத் தின்றாலும் வயிறு அரைத்து விடும். காலை உணவை பேரரசன் போல் உண்ண வேண்டும் என்று சொல்வார்கள். இந்த நேரத்தில் சாப்பிடுவதுதான் நன்கு செரிமானமாகி உடலில் ஒட்டும்.

��காலை 9.00 மணிமுதல் 11.00 மணி வரை மண்ணீரலின் நேரம்.
காலையில் உண்டஉணவை மண்ணீரல் செரித்து ஊட்டச் சத்தாகவும் ரத்தமாகவும் மாற்றுகிற நேரம் இது. இந்த நேரத்தில் பச்சைத் தண்ணீர் கூடக் குடிக்கக்கூடாது. மண்ணீரலின் செரிமான சக்தி பாதிக்கப்படும்.
நீரழிவு நோயாளிகளுக்கு மோசமான நேரம் இது.

��முற்பகல் 11.00 மணிமுதல் பிற்பகல் 1.00 மணி வரை இதயத்தின் நேரம். இந்தநேரத்தில் அதிகமாகப் பேசுதல், அதிகமாகக் கோபப்படுதல், அதிகமாகப் படபடத்தல் கூடாது. இதயம் பாதிக்கப்படும். இதய நோயாளிகள் மிகமிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்.

��பிற்பகல் 1.00 மணிமுதல் 3.00 மணி வரை சிறு குடலின் நேரம்.
இந்த நேரத்தில் மிதமாக மதிய உணவை உட்கொண்டு சற்றே ஓய்வெடுப்பது நல்லது.

��பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை சிறுநீர்ப்பையின் நேரம். நீர்க்கழிவுகளை வெளியேற்ற சிறந்த நேரம்.

��மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை சிறுநீரகங்களின் நேரம். பகல் நேரபரபரப்பிலிருந்து விடுபட்டு அமைதி பெற, எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க,தியானம்செய்ய, வழிபாடுகள் செய்ய சிறந்த நேரம்.

��இரவு 7.00 மணி முதல் 9.00 மணி வரை, பெரிகார்டியத்தின் நேரம்.
பெரிகார்டியம்என்பது இதயத்தைச் சுற்றி இருக்கும் ஒரு ஜவ்வு இதயத்தின் Shock absorber. இரவு உணவுக்கு உகந்த நேரம் இது.

��இரவு 9.00 மணி முதல் 11.00 மணி வரை, டிரிப்பிள் கீட்டர் என்பது ஒரு உறுப்பல்ல. உச்சந்தலை முதல் அடி வயிறு வரை உள்ள மூன்று பகுதிகளை
இணைக்கும் பாதை. இந்த நேரத்தில் உறங்கச் செல்வது நல்லது.

��இரவு 11.00 மணி முதல் 1.00 மணி வரை பித்தப்பை இயங்கும் நேரம். இந்த நேரத்தில்தூங்காது விழித்திருந்தால் பித்தப்பை இயக்க குறைபாடு ஏற்படும்.

��இரவு 1.00 மணி முதல் விடியற்காலை 3.00 மணி வரை கல்லீரலின் நேரம். இந்தநேரத்தில் நீங்கள் உட்காந்திருக்கவோ விழித்திருக்கவோ கூடாது.
கட்டாயம் படுத்திருக்க வேண்டும். உடல் முழுவதும் ஓடும் ரத்தத்தை கல்லீரல் தன்னிடத்தே வரவழைத்து சுத்திகரிக்கும் நேரம் இது. இந்த பணியை நீங்கள் பாதித்தால் மறுநாள் முழுவதும் சுறுசுறுப்பில்லாமல் அவதிப்படுவீர்கள்.

என்ன... நான் சொல்றது சரிதானே!
கரும்பு நட்டேன் விற்கவில்லை.
கம்பு நட்டேன் விற்கவில்லை.
நெல் நட்டேன் விற்கவில்லை.
கடைசியில் ....
கல் நட்டேன் விற்றுவிட்டது.             - விவசாயி.

அதிகாலை எழுவது ........
 4  மணிக்கு              = ரொம்ப நல்லது.
 5 மணிக்கு               = நல்லது.
 6 மணிக்கு               = பரவாயில்லை.
 7 மணிக்கு               = சோம்பேறி.
 8 மணிக்கு               = சுடு சோம்பேறி.
 9 மணிக்கு               = நோயாளி.
10 மணிக்கு              = வாழ்வதே வீண்.
11மணிக்கு               = உயிர் வாழ்வதே வீண்.

உங்களுக்குத் தெரியுமா?
கண்களைத் திருப்பாமலேயே பின்பக்கம் பார்க்கும் பிராணிகள் 2.
ஒன்று முயல்.    இரண்டு கிளி.

பாட்டி வைத்தியம்:
புதினா இலையை வாயில் போட்டு மென்று கொண்டிருந்தால்  பல்லில் ஏற்படும் கூச்சம் போய்விடும்.

சிறிது புன்னகைத்துப் பாருங்கள்.  
உலகம் எவ்வளவு பிரகாசம் என்பதை உணருங்கள்.
ஒரு இன்டர்வியூ நடக்கிறது.... 
உங்களுக்கு பிடிச்ச ஊர் எது..? 
சுவிட்சர்லாந்து. 
எங்கே Spelling சொல்லுங்க.. 
ஐயையோ.. அப்படின்னா கோவா...! 

Tuesday, August 25, 2015

          தமிழ் நாடு 
         கலை இலக்கியப் பெருமன்றம் 
        தஞ்சை மாவட்டப்  பேரவைக்  கூட்டம் 
06-08-2015


   தமிழ் நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாவட்டப்  பேரவை தஞ்சை AITUC அலுவலகத்தில் நடைபெற்றது.   நமது மாவட்டச் செயலர் ஆ. குழந்தைவேலு அவர்கள் தலைமை வகித்தார்.   
    மாவட்டத் தலைவர் ச. புகழேந்தி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். மாவட்டச் செயலர் தோழர். ஆ.குழந்தைவேலு அவர்கள் பேரவை அறிக்கையை சமர்ப்பித்துப்  பேசினார்.   CPI மாவட்டச் செயலர் தோழர் R. திருஞானம் அவர்களும், AITUC  மாநிலத் தலைவர் தோழர் சந்திரகுமார் அவர்களும் வாழ்த்துரை வழங்கினர்.
      பேரவையில் கீழ்க்கண்ட தோழர்கள் மாவட்டக் குழுவின் புதிய பொறுப்பாளர்களாக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    தலைவர்                                 : S. சிவசிதம்பரம், பட்டுக்கோட்டை.
    துணைத் தலைவர்கள்            : Dr. மு. செல்லப்பன் 
                                                       புலவர் மூ. முத்துவேலு 
                                                       நா. விச்சுவநாதன்  
    செயலர்                                    : A. குழந்தைவேலு, தஞ்சாவூர்.
    துணைச் செயலாளர்கள்         : முனைவர். பிரகதீசு 
                                                       கவிஞர். வல்லம் தாஜுபால்
                                                       இரா. சுந்தரம்
   பொருளாளர்                            : ச. புகழேந்தி, திருவையாறு 

    இறுதியாக மாநிலப் பொதுச் செயலாளர்  இரா. காமராசு அவர்கள் விளக்கவுரையாற்றினார்.  மன்னையில் நடைபெறவிருக்கும் மாநில மாநாடு பற்றியும், மன்றத்தின் எதிர்காலச் செயல்பாடுகள்  குறித்தும், உறுப்பினர் செயல்பாடு, புதிய உறுப்பினர் சேர்க்கையில் நமது அணுகுமுறை ஆகியவை பற்றியும் விளக்கமாக பேசினார்.   இறுதியில் பட்டுக்கோட்டை கிளைச் செயலர் புலவர். மூ. முத்துவேலு அவர்கள்  நன்றியுரை கூற பேரவை இனிதே முடிந்தது.   



நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் 

    1. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் 11 வது மாநில மாநாடு வரும் செப்டம்பர் 11,12,13 ஆகிய தேதிகளில் மன்னார்குடியில் நடைபெறுவதையொட்டி அம் மாநாடு சிறக்க அனைவரும் கலந்து கொள்வது.

     2. தஞ்சையில் உள்ள தென்னகப் பண்பாட்டு மையத்தில் பழிவாங்கப்பட்ட பணியாளர் சங்கத் தலைவர் மற்றும் செயலருக்கு உடனடியாக பணி  வழங்க வேண்டும்.   ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  3. பள்ளிகளில் தமிழ் மொழிப் பாடம் கட்டாய பாடமாக சட்டம் இயற்ற வேண்டும். 

   4. திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்.